--- --:--:-- --

பொய்யான தகவல்களை பரப்பிய யூடியூபர் கைது..!

8

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த நாபிரட்டிபாலயத்தின் அரசின் திட்டங்கள் குறித்து பொய்யான தகவல்களை பரப்பியதாக பொறியியல் பட்டதாரி கைது செய்யப்பட்டார். புதிய அறிவிப்புகள் உங்களுக்காக என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார் இவர்.

 

தனது சேனலில் பிரபல தொலைக்காட்சிகளில் யூடியூப் வீடியோவை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி அரசின் திட்டங்கள் குறித்து பொய்யான தகவலை பரப்பியதாக கூறப்படுகிறது. சென்னை தாம்பரத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் அளித்த புகாரின் பேரில் ஜனார்தன ரெட்டியை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon