--- --:--:-- --

மாணவர்களிடம் ஜாதியை பற்றி பேசிய பேராசிரியர் பணியிடை நீக்கம் ..!

9

மாணவர்களிடம் ஜாதியை பற்றி பேசிய பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் அனுராதா இரண்டு மாதங்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரசு நிதி உதவி பெறும் கல்லூரி பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றி வருபவர் பேராசிரியர் அனுராதா.

 

இவர் மாணவர்களுடன் ஜாதியை பற்றி பேசியதாக அண்மையில் சமூக வலைதளங்களில் ஆடியோ வெளியாகி சர்ச்சையானது. அடுத்த ஒரு சில நாட்களில் மீண்டும் சம்பந்தப்பட்ட மாணவரின் குடும்பத்தினரிடம் தொடர்பு கொண்டு மீண்டும் ஜாதியை பற்றி அனுராதா பேசிய ஆடியோவும் வெளியானது.

 

இந்த விவகாரம் குறித்து கல்லூரி நிர்வாகம் தனி குழு அமைத்து விசாரணை நடத்திய விசாரணையில் பேராசிரியராகவும், ஜாதி ரீதியில் மாணவருடன் பேசியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பேராசிரியை அனுராதாவை இரண்டு மாதங்களுக்கு பணியிடை நீக்கம் செய்து கல்லூரி செயலாளர் துரைக்கண்ணு உத்தரவிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon