பெண்கள் ஆபாசமாக உடை அணிவதே பாலியல் சீண்டலுக்கு காரணம்..! நீதிபதியின் கருத்துக்கு சர்ச்சை..!
பெண்கள் ஆபாசமாக உடை அணிவதே பாலியல் சீண்டலுக்கு காரணம் என கேரள நீதிமன்ற நீதிபதி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் புகார் தொடர்பான வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் விசாரித்த நீதிபதி புகாருக்கு உள்ளானவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இந்நிலையில் புகார் தாரர் குற்றத்திற்கு ஆபாசமாகவும் கவர்ச்சியாகவும் உடையணிந்து வந்ததே காரணம் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார். பெண்கள் ஆபாசமாக உடை அணிவது பாலியல் சீண்டலுக்கு காரணமாக அமையும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார் கோழிக்கோடு நீதிமன்ற நீதிபதி.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





