10 குழந்தைகளை பெற்றெடுக்கும் பெண்களுக்கு 13 லட்சம் ரூபாய் பரிசு..!
ரஷ்யாவில் 10 குழந்தைகளை பெற்றெடுக்கும் பெண்களுக்கு அன்னை நாயகி பட்டமும் 13 லட்சம் ரூபாய் பணமும் வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ரஷ்யாவில் கொரோனாவால் மக்கள் தொகை பெருக்கமும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஈடு கட்டும் நோக்கில் 10 குழந்தைகளை பெற்றெடுக்கும் பெண்களுக்கு பட்டத்துடன் பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பத்தாவது குழந்தை ஒரு வயதை எட்டும் போது மட்டும் பரிசுத்தொகையும் பணமும் கிடைக்கும் அனைத்து குழந்தைகளும் உயிருடன் இருக்க வேண்டியது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




