--- --:--:-- --

வீடு துடைக்கும் மாப் குச்சியில் தேசிய கொடி ஏற்றிய நடிகர் சூரி..!

9

நடிகர் சூரி தனது வீட்டில் தேசிய கொடி ஏற்றி இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக தற்போது சினிமா நட்சத்திரங்கள் பலரும் தங்கள் வீட்டின் முன்பு தேசிய கொடியை ஏற்றி வருகின்றனர்.

 

ரஜினி, விஜய் என பல முன்னணி ஹீரோக்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றப்பட்ட புகைப்படங்கள் நேற்று வெளியானது.இந்நிலையில் இன்று நடிகர் சூரி அவரது அபார்ட்மெண்டில் தற்போது தேசிய கொடியை ஏற்றி இருக்கிறார். அதன் புகைப்படத்தை சூரி வெளியிட்டு இருக்கும் நிலையில் அதை பார்த்து நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.

 

வீடு துடைக்கும் மாப் குச்சியில் அவர் தேசிய கொடி ஏற்றி இருப்பதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்து இருக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon