பிலிப்பைன்சில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!
பிலிப்பைன்சின் வடக்கு மாகாணத்தில் ஆக்ராவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து சேதம் அடைந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். தலைநகர் மணிலாவில் பல பகுதிகளில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.9 ஆக பதிவானது.
நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் பீதி அடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட நில அதிர்வுகளும் 50க்கும் மேற்பட்ட நிலச்சரிவுகளும் பதிவானதால் வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து பல வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




