விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த பெண்..!
அமெரிக்காவில் விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த பெண்ணை பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டு பிடித்த வீடியோ வெளியாகியுள்ளது. விமான நிலையத்திற்குள் நுழைந்த பெண் ஒருவர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவரை சரணடையும்படி காவல்துறையினர் வலியுறுத்தினார். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் சுட்டு பிடித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வு காவல் அதிகாரி ஒருவர் உடலில் பொருத்தி இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.
துப்பாக்கியுடன் விமான நிலையத்திற்குள் நுழைந்து அதற்கான நோக்கம் குறித்து அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




