--- --:--:-- --

வாடகைக்கு இருந்த பெண்ணிடம் அத்துமீறி குளிக்கும்போது வீடியோ எடுத்த நபர்..!

8

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வீட்டில் வாடகைக்கு இருந்த பெண்ணிடம் அத்துமீறி குளிக்கும்போது வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த தம்பதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பரமக்குடியை சேர்ந்த அப்துல்லா என்பவர் அதே பகுதியில் ரவி குமார் என்பவரது வீட்டில் 20 லட்சம் ரூபாய் முன்பணமாக கொடுத்து வாடகைக்கு இருந்து வந்துள்ளார்.

 

தனது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில் குழந்தைகளுடன் அபிநயா தனியாக வசித்து வருகிறார். இதில் அறையில் கேமராவை வைத்து வீட்டின் உரிமையாளர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை காண்பித்து அபிநயாவை மிரட்டி சுமார் 17 லட்சம் ரூபாய் வரை அவர் பறித்ததோடு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் கூறப்படுகிறது.

 

இதற்கு ரவிக்குமார் மனைவி வனிதா உடந்தையாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மனமுடைந்த காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இது தொடர்பாக புகார் அளித்ததனை தொடர்ந்து ரவிக்குமார் மற்றும் அவரது மனைவி வனிதா மீது மிரட்டி பணம் பறித்தல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon