ஒன்றரை வயது தம்பியுடன் சாலையை கடக்க முயன்ற சிறுமி விபத்தில் சிக்கினார்..!
தென்காசி மாவட்டம் ஆவுடையாரில் ஒன்றரை வயது தம்பியுடன் சாலையை கடக்க முயன்ற சிறுமியை இருசக்கர வாகனம் இடித்து தள்ளும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் ஆவுடையார் முப்பிடாதி அம்மன் கோயில் அருகே சிறுமி ஒருவர் தனது ஒன்றரை வயது தம்பியுடன் சாலையை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது இருசக்கர வாகனம் ஒன்று சிறுமி மீது மோதியதில் சிறுமி மயங்கி விழுந்த நிலையில் சிறுமிக்கு தண்ணீர் எடுத்து ஆசுவாசப் படுத்தினார். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





