திருடிய வீட்டிலேயே அசந்து தூங்கிய திருடன்.!
மதுரையில் வீட்டு கதவை உடைத்து நகைகளை திருடி விட்டு அசந்து தூங்கிய திருடனை போலீஸார் கைது செய்தனர். தனது வீட்டிற்கு நள்ளிரவில் வீட்டிற்கு திரும்பியவர் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 7 சவரன் நகை நான்காயிரம் ரூபாய் பணத்தை திருடிவிட்டு இளைஞர் ஒருவர் உறங்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது. நடராஜன் என்ற அந்த இளைஞரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




