--- --:--:-- --

மகிழ்ச்சியில் தன் மனைவி மீது சைக்கிளை ஏற்றிய வீரர்..!

5

கொலம்பியாவில் ஆண்டுதோறும் சைக்கிள் பந்தயம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடப்பாண்டிற்கான போட்டி சமீபத்தில் நடைபெற்றது. பந்தயத்தில் லூசியா என்பவர் வெற்றி பெற்றார். அவர் பந்தய இலக்கை அடைவதை புகைப்படம் எடுக்க அவரின் மனைவி இலக்கின் குறுக்கே நின்று கொண்டிருந்தார்.

 

வெற்றி பெற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்திய படியே சைக்கிளில் அமர்ந்து வந்த அவர் எதிரே நின்ற தனது மனைவியைக் கவனிக்கவில்லை, வந்த வேகத்தில் நேராக மனைவி மீது மோதினார்.

 

இதில் நிலைகுலைந்து அவர் கீழே விழுந்தார் அவரின் மனைவி. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த இந்த விபத்தை பின்புதான் உணர்ந்தார். கேமராவில் பதிவான இந்த விபத்தின் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon