குழந்தைகளுக்கான நலத்திட்டத் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்..!
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கொரொனாவால் தாய், தந்தை இருவரையும் அல்லது ஒருவரை மட்டும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டத்தை காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.
பிஎம் கேர்ஸ் திட்டத்தின் பாஸ்போர்ட் மற்றும் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் சுகாதார அட்டைகளையும் பிரதமர் மோடி வழங்கினார். குழந்தைகளுக்கு உறைவிட வசதி அளித்தல், கல்வி மற்றும் உதவித்தொகை வழங்குதல் மற்றும் அவர்கள் தன்னிறைவு அடையும் வகையில் 23 வயது வரை 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்தல், மருத்துவ காப்பீடு மூலம் அவர்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்தல் ஆகியவையே இந்த திட்டத்தின் நோக்கம் என கூறினார்.
தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பல கொரொனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் குழந்தைகளுடன் பிரதமர் மோடி உரையாடினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




