--- --:--:-- --

பாம்பு தாக்கி சிங்கம் உயிரிழப்பு..!

5

இஸ்ரேல் நாட்டில் இருந்து ஒடிசா உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்ட சிங்கம் இன்று காலை உயிரிழந்தது. இஸ்ரேல் நாட்டில் இருந்து கடந்த 2015ஆம் ஆண்டு பெண் சிங்கம் கொண்டுவரப்பட்டது. புவனேஸ்வர் பகுதியில் பிரபல உயிரியல் பூங்காவில் வளர்க்கப்பட்டு வந்தது.

 

தற்போது 15 வயது நிரம்பிய அந்த பெண் சிங்கத்தை இன்று காலை விஷப்பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மயக்க நிலையில் இருந்த பெண் சிங்கத்திற்கு விலங்கியல் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் அதை காப்பாற்ற முடியவில்லை. உயிரியல் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களுக்கு இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon