அனைத்து குடும்பங்களுக்கும் மாதந்தோறும் ரூ. 2000 உதவித்தொகை..!
பாகிஸ்தானில் அனைத்து குடும்பத்தினருக்கும் மாதந்தோறும் 2000 ரூபாய் வழங்கப்படும் என அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். அந்நாட்டில் பெட்ரோல் விலை புதிய உச்சமாக ஒரு லிட்டர் 200 ரூபாயை நெருங்கியுள்ளது.
திவால் ஆவதை தடுக்கும் நோக்கில் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய இருந்ததாக ஷெரிப் தெரிவித்துள்ளார். இதை ஈடு செய்யும் வகையில் ஒரு கோடியே 40 லட்சம் குடும்பங்களுக்கு மாதம்தோறும் 2,000 ரூபாய் வழங்கப்படும் என்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




