தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது?
தமிழ்நாட்டில் வரும் கல்வியாண்டுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கும் என்பது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டிருக்கிறார். 2021-2022 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் மே மாதம் வரை நடைபெற்று தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 13-ஆம் தேதி அடுத்த கல்வி ஆண்டு தொடங்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பள்ளிகள் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கல்வித்துறை கூறியிருந்தது.
இந்தநிலையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் காலாண்டு, அரையாண்,டு பொதுத் தேர்வு கால அட்டவணை என அனைத்து விவரங்களையும் வெளியிடுவார் என கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





