விரைவில் இல்லத்தரசிகளுக்கு ரூ.1,000 கிடைக்கும்..!
இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்கிற பொதுமக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். தமிழக அரசின் ஓராண்டு சாதனை பொதுக்கூட்டம் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய ஐ.பெரியசாமி திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் முதலமைச்சர் நிறைவேற்றி வருவதாகவும், கூட்டுறவுத்துறையில் முதல்வர் அறிவித்த நகை கடன் தள்ளுபடி விவசாய கடன் தள்ளுபடி என அத்தனை திட்டமும் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவித்தார்.
இதுவரை 20 ஆயிரம் கோடி அளவுக்கு திட்டங்களை நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறிய பெரியசாமி இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் நிதிநிலை சரியானவுடன் வழங்கப்படும் எனவும் கடந்த கால அதிமுக அரசு 6 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையை வைத்து சென்றிருப்பதாக இல்லத்தரசி திட்டமிட்டு இருப்பதாகவும் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





