பருத்தி, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த முதல்வர் வலியுறுத்தல்..!
பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய ஜவுளித்துறை அமைச்சர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வலியுறுத்தினார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஒன்றிய ஜவுளி மற்றும் வர்த்தக தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயலை தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிகிறது.
அப்போது பருத்தி மற்றும் நூல் விலை உயர்வினால் தமிழகத்தில் ஜவுளி தொழில் எதிர்கொள்ளும் கடுமையான இடையூறுகள் குறித்து எடுத்துரைத்து விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் வலியுறுத்தினார்.
முன்னதாக பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க கோரி கடந்த ஜனவரி மாதம் அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியிருந்தார். அதை தொடர்ந்து தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக கடந்த 16ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
அதுமட்டுமின்றி திமுக எம்பி கனிமொழி தலைமையில் அனைத்து கட்சி எம்பிக்கள் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பருத்தி மற்றும் நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சரின் கடிதத்தை அளித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





