தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் ..!

மிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே அந்தமான் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பூர், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

மேலும் 23 ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

 

வரும் 21ஆம் தேதி வரை லட்சத்தீவு, கர்நாடகா, கேரளாவை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல், மன்னார் வளைகுடா கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.