உலக செவிலியர் தினத்திற்கு பிரதமர் வாழ்த்து..!
உலக செவிலியர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.எனவே, பிரதமர் மோடி செவிலியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த நாளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் செவிலியர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து இருக்கிறார்கள்.
பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் உலக செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. செவிலியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி நமது பூமியை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் செவிலியர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்துள்ளார்.
அவர்களது அர்ப்பணிப்பும், சிறந்த முன்னுதாரணம் என்றும் சவாலான சூழ்நிலையிலும் சிறப்பான பணியில் ஈடுபடும் செவிலியர்களுக்கு மீண்டும் பாராட்டை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை அருகில் மாவட்ட செவிலியர் சங்கம் சார்பில் செவிலியர் தினம் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
செவிலியர் விடுதி வளாகத்தில் உள்ள நைட்டிங்கேல் அம்மையார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தஞ்சை அரசு ராஜாஜி அரசு மருத்துவமனையில் நைட்டிங்கேல் அம்மையார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியதுடன் செவிலியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
பதவி உயர்வு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும், கொரொனா காலத்தில் பணியாற்றிய தற்காலிக ஊழியர்களை பணியமர்த்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





