--- --:--:-- --

பெண்ணை தரதரவென்று இழுத்து சென்றதால் பரபரப்பு..!

9

கரூரில் திருநங்கைகளுக்கும், பயணிகளுக்கும் ஏற்பட்ட மோதலில் அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு 10 மணியளவில் அரசு நகரப் பேருந்தில் ஏறிய திருநங்கைகள் யாசகம் கேட்டுள்ளனர்.

 

அப்பொழுது திருநங்கைகளுக்கும் பயணிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு கைகலப்பாக மாறிய நிலையில் 2 அரசுப் பேருந்துகளில் முன்பக்க கண்ணாடிகள் பேருந்து நிலையத்தில் அலுவலகத்தின் கண்ணாடியும் உடைக்கப்பட்டது.

 

இதனை தொடர்ந்து நடைபெற்ற கலவரம் காரணமாக பயணிகளும் பொதுமக்களும் அலறியடித்துக்கொண்டு பேருந்து நிலையத்தை விட்டு வெளியே ஓடினர். இந்த கலவரம் காரணமாக சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் வராததால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon