திருப்பதியில் நயன்தாரா விக்னேஷ் சாமி தரிசனம்..!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாத தரிசனத்தில் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் சாமி தரிசனம் செய்தனர். காத்துவாக்குல இரண்டு காதல் படம் வெளியானதையடுத்து திருமலை சென்று நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சுவாமி தரிசனம் செய்தனர்.
அவர்களை கண்ட ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து அவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். சிவப்பு நிற உடையில் ரசிகர்களின் மனங்களை கொள்ளை அடிக்கும் வகையில் தோற்றத்தில் நயன்தாராவின் புகைப்படங்களை ரசிகர்கள் அதிகளவில் பதிவிட்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





