ஹிப்ஹாப் ஆதி வீட்டின் மீது கல்வீசி தாக்குதல்..!
குடிபோதையில் நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதி வீட்டின் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஹிப்ஹாப் தமிழா ஆதிவீட்டின் கதவில் மர்மநபர்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தி விட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் பழனியை சேர்ந்த பிரேம்குமார் மதுரையை சேர்ந்த அர்ஜூன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





