--- --:--:-- --

கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய வீரரை காப்பாற்றிய மற்றொரு வீரர்..!

4

பிரேசிலின் கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அலைச்சறுக்கு வீரரை மற்றொரு வீரர் கடலுக்குள் குதித்து காப்பாற்றினார். ட்விட்டரில் குட் நியூஸ் என்ற இணையத்தின் மூலம் பகிரப்பட்ட வீடியோவில் கடற்கரை ஒன்றில் அலைச்சறுக்கு வீரர் கடல் அலையின் வேகம் காரணமாக கரை திரும்ப முடியாமல் தவித்தார்.

 

அலைச்சறுக்கு வீரர் பாறைகளின் மீது ஏறி சொல்கிறார். ஆனாலும் அதற்குள் அலை அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றுவிடுகிறது. வெளியே போக முடியாமல் தவிக்கிறார். அலை அவரை புரட்டி எடுக்கிறது. இதைக்கண்ட கரையில் இருந்த மற்றொரு அலை சறுக்கு வீரர் உள்ளே பாய்ந்துள்ளார்.

 

பின்னர் ஹெலிகாப்டர் வந்து இருவரையும் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தது. இதையடுத்து கடற்கரையில் குவிந்த மக்கள் உற்சாகம் அடைந்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon