நடுரோட்டில் ஸ்விகி டெலிவரி பாயை அடித்து உதைத்த பெண்…!
தனது இருசக்கர வாகனத்தில் இடித்த உணவு டெலிவரி செய்யும் நபரை நடுரோட்டில் வைத்து செருப்பால் அடித்த பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் பெண் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது உணவு டெலிவரி செய்யும் நபர் ஒருவர் டிராபிக்கில் வேகமாக வந்த அந்த நபர் பெண்ணின் இருசக்கர வாகனத்தில் இடித்துள்ளார். இதனால் நிலை தடுமாறி தரையில் விழுந்த அவர் மீண்டும் எழுந்து பைக் ஓட்டி வந்து உணவு டெலிவரி செய்யும் நபரை தனது செருப்பால் சரமாரியாக அடித்து காலால் எட்டி உதைத்தார்.
அருகில் இருந்தவர்கள் அந்த பெண்ணை சமாதானப்படுத்த முயன்ற பொழுது அவர் யாருடைய பேச்சையும் கேட்காமல் இளைஞரை அடித்துக் கொண்டே இருந்துள்ளார். இதுகுறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இது குறித்து காவல் நிலையப் பொறுப்பாளர் இந்த சம்பவம் குறித்து யாரும் புகார் அளிக்கவில்லை. புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




