--- --:--:-- --

காலை உணவு தராததால் மருமகளை துப்பாக்கியால் சுட்ட மாமனார்..!

4

மகாராஷ்டிராவை சேர்ந்த முதியவர் ஒருவர் 11.30 மணி வரை காலை உணவை தராததால் மருமகளை துப்பாக்கியால் சுட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் தானே பகுதியை சேர்ந்த 76 வயது முதியவரான காசிநாத் என்பவருக்கு தேநீர் வழங்கிவிட்டு காலை சிற்றுண்டியை அவரது மருமகள் கொடுக்கவில்லை.

 

இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தனது கைத் துப்பாக்கியால் சுட்டதில் மருமகளின் வயிற்றுப் பகுதியில் குண்டு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இது குறித்து காவல் நிலையத்தில் மற்றொரு மருமகள் அளித்த புகாரில் அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon