கடலில் விழுந்த ஹெலிகாப்டர்..! ஓட்டம் பிடித்த மக்கள்..!
அமெரிக்காவின் மியாமி கடற்கரையை ஒட்டிய பகுதியில் வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென கடலில் விழுந்து நொறுங்கியது. இதனால் கடலில் குளித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது மொத்தம் 3 பேர் பயணம் செய்ததாகவும், ஹெலிகாப்டரில் மூவரும் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர் என்றும் இந்த விபத்து தண்ணீர் இல்லாமல் தரையில் நிகழ்ந்திருந்தால் மூவரும் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





