--- --:--:-- --

ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு..!

3

மிழகத்தில் சில மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டையில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் நாளை முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை எனவும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon