விமானம் விழுந்து நொறுங்கிய விவகாரம்..!
மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்ட நிலையில் அது விமானி அறையில் இருக்கும் குரல் பதிவாகும் பெட்டி என்றும் மிகுந்த சேதமடைந்துள்ள பெட்டியில் பதிவான குரல்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரு நாட்களுக்கு முன்பு 132 பயணிகளுடன் சென்ற சீன ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மலைப் பகுதியில் விழுந்து சுக்குநூறாக நொறுங்கியது. விமானத்தின் கருப்பு பெட்டி ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
விமானி அறையில் இருக்கும் குரல் பதிவு பெற்றது. விபத்திற்கு முன் என்ன நடந்தது என்பதை அறிய பெட்டி பெய்ஜிங்கில் உள்ள ஆய்வகத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





