--- --:--:-- --

சாலையை கடக்க முயன்ற முதியவர் நூலிழையில் உயிர் தப்பினார்..!

2

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே திண்டுக்கல், கரூர் நாகவள்ளி சாலையில் சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது கார் மோதிய விபத்தில் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

ராஜபாளையத்தை சேர்ந்த பெரியசாமி என்பவர் 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக ரங்கநாதபுரம் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் திடீரென அவர் மீது மோதியது. பெரியசாமி மயங்கி விழுந்தார்.

 

அவர் சாலையை கடப்பதை பார்த்த ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு காரை இடதுபுறமாக திருப்பியதால் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் பெரியசாமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon