--- --:--:-- --

பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று முதல் திறப்பு..!

4

மிழ்நாட்டில் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற உள்ளன. பள்ளிகளில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

 

தமிழகத்தில் கொரொனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டது. இந்நிலையில் கொரொனா பரவல் குறைந்ததை தொடர்ந்து தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது.

 

அதன்படி தமிழ்நாட்டில் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற உள்ளன. நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் இன்று முதல் முழுமையாக செயல்பட உள்ளன. எனவே பள்ளிகள் சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon