தேர்தலுக்கும் கொரோனா எண்ணிக்கை குறைவதற்கும் தொடர்பு இல்லை..!
தமிழகத்தில் கொரொனா தொற்று எண்ணிக்கை குறைவதற்கும், தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்களை பகிர வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். தேர்தல் வருவதால் தான் கொரொனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது என மக்களிடையே பேச்சு நிலவி வந்துள்ளதை அடுத்து அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ராதாகிருஷ்ணன் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





