--- --:--:-- --

கழிவறைக் கோப்பையிலிருந்து வெளி வந்த விஷ உடும்பு..!

2

தாய்லாந்தில் புதிதாக கட்டப்பட்டு இருந்த ஹோட்டலின் கழிவறை கோப்பையில் விஷம் கொண்ட உடும்பு இருந்த சம்பவம் சுற்றுலா பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இங்கிலாந்தின் சுற்றுலா பயணிகள் சிலர் தாய்லாந்து நாட்டில் பத்தும் தானி என்கிற இடத்தை சுற்றி பார்க்க சென்றிருக்கிறார்கள். அங்கு புதிதாக கட்டப்பட்டு இருந்த ஒரு ஹோட்டலில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது ஒரு பெண் ஹோட்டல் கழிவறைக்கு சென்றுள்ளார்.

 

கழிவறைக்கு சென்ற அந்த பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. திடீரென கழிவறை கோப்பைக்குள் இருந்து கருப்பு நிறத்தில் விஷத்தன்மை கொண்ட உடும்பு ஒன்று நெழிவதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

 

உடனடியாக அவரது கணவரை கத்திக் கூச்சலிட்டு அழைத்துக் கொண்டு வீடியோ எடுத்திருக்கிறார். விஷ உடும்பை கண்டு அங்கிருந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடி இருக்கிறார்கள்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon