மனைவியை ரொம்ப நேசிக்கிறவங்க குக்கரை வேண்டாம்ன்னு சொல்ல மாட்டாங்க..! நூதன முறையில் போஸ்டர்..!
மதுரை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் பாத்திமா பீவி என்ற வேட்பாளர் நூதன முறையில் போஸ்டர் ஒட்டியுள்ளது பொது மக்களை கவர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் வருகிற பிப்ரவரி 19-ஆம் நாள் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதற்கான தேர்தல் பணிகளில் தமிழகத்தின் பிரதான கட்சிகள் ஈடுபட்டு வரும் நிலையில் தினகரனின் அமமுக கட்சி தனித்து தேர்தலை சந்திக்கிறது. இந்த நிலையில் மதுரை மாநகராட்சி பதவிக்காக 61வது வேட்பாளராக அமமுகவில் பாத்திமா பீவி போட்டியிட உள்ளார்.
அவர் அந்த தொகுதி மக்களின் ஓட்டுக்களை கவர்வதற்காக நூதன முறையில் வார்டு முழுவதும் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டர்களில் மனைவியை ரொம்ப நேசிக்கிறவங்க குக்கர் வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க… ஷோ குக்கர் சின்னத்துக்கு ஓட்டுப் போடுங்க என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. அமமுக கட்சியின் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





