--- --:--:-- --

நாளை முதல் பள்ளிக்கு செல்வோருக்கு வெளியாகியுள்ள 10 முக்கிய அறிவிப்பு..!

12

கொரொனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் நாளை முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன. இந்த சூழ்நிலையில் நாளை முதல் அனைத்து பள்ளிகளும் முழுமையாக செயல்பட உள்ள நிலையில் பள்ளிகள் சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

 

பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. பள்ளிக்கு வரும் மாணவர்கள், பணியாளர்கள் அனைவரும் கட்டாயமாக முககவசம் அணிந்து இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

அடிக்கடி கைகளை சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்துகொள்ள வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும்போது மாணவர்களின் உடல் வெப்பநிலையை சோதனை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனே அவர்களை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வகுப்பறையில் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பள்ளிகளில் முககவசம் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களும் கட்டாயம் தடுப்பூசி செய்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon