4 வருடமாக முகநூலில் காதலித்து அவசர திருமணம்..!
காட்டுமன்னார்கோவில் அருகே நான்கு வருடமாக முகநூலில் காதலித்த காதலனுடன் இளம்பெண் திருமணம் செய்துகொண்டார். விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜமுனா.
முகநூல் மூலம் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறி இருவரும் நேரில் சந்திக்காமல் காதலை வளர்த்துள்ளனர்.
இது தெரிந்ததால் ஜமுனாவுக்கு வேறு ஒரு நபருடன் திருமண ஏற்பாடு நடந்தது. இதனால் வீட்டை விட்டு வெளியேறிய ஜமுனா காதலரைத் தேடி வந்தார். காதலனை சந்தித்து உடனடியாக திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று ஜமுனா கூறினார்.
அங்காளம்மன் கோயிலில் நண்பர்கள் உதவியுடன் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. பின்னர் இருவரும் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இருதரப்பு பெற்றோரையும் போலீசார் அழைத்து பேசி வேல்முருகனின் குடும்பத்துடன் சம்மதித்து அனுப்பி வைத்தனர்.






