--- --:--:-- --

10 மாநிலங்களில் தொற்று அதிகரிப்பு..!

4

10 மாநிலங்களில் கொரொனா பரவல் அதிகரித்து வருகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுவரை 52% சிறார்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

சுகாதாரத்துறை செயலாளர் இன்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், குஜராத், ஒரிசா, டெல்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அதிகரித்து வருகிறது என்றும் கூறினார்.

 

அதிகமாக உள்ள மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை நிபுணர்கள் குழு அனுப்பி வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். இந்தியாவில் கடந்த நான்கு வாரங்கள் மட்டும் 18.4 சதவீதம் வரை உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

 

15 வயது முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு 52 சதவீதம் வரை தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon