என்னை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை – கோலி அதிரடி
தான் முழு உடல் தகுதியுடன் இருப்பதாக இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்திருக்கிறார். தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் சமநிலையில் உள்ளது.
நாளை தொடங்க உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்ல இந்திய அணி மும்முரமாக உள்ளது. 2வது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக விளையாடாத கேப்டன் விராட் கோலி நாளை நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் நான் முழு உடல் தகுதியுடன் உள்ளேன் எனவும், தான் உடல் தகுதி குறித்த விமர்சனங்கள் பற்றி தான் கவலை பட போவதில்லை எனவும் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





