--- --:--:-- --

மனித முகச்சாயலில் ஆட்டுக்குட்டியை ஈன்றெடுத்த ஆடு..!

2

அசாமில் கச்சார் மாவட்டத்தில் ஒரு ஆடு மனிதனைப் போன்று ஒரு குட்டியை ஈன்றுள்ளது உள்ளூர் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகில் ஏதாவது ஒரு மூலையில் ஏதாவது ஒரு அதிசயம் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். அப்படிப்பட்ட அதிசயம்தான் இது.

 

பொதுவாக ஆடு ஆட்டுக்குட்டியையும், நாய் நாய் குட்டியையும். மாடு கன்று குட்டியையும் ஈன்றுவது தான் இயல்பு. ஆனால் அசாமில் ஆடு குட்டி ஒன்று மனிதனைப் போன்ற அங்க அடையாளங்களை கொண்டிருந்தது. அதன் கண்கள், மூக்கு மற்றும் வாய் மனிதனை ஒத்திருக்கிறது.

 

இந்த ஆட்டுக்குட்டி இரண்டு கால்களுடன் பிறந்திருக்கிறது. இந்த செய்தி பரவியதும் விசித்திரமான தோற்றமுடைய ஆடு குட்டியை பார்ப்பதற்காக கிராமத்தில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon