--- --:--:-- --

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!

5

பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்தார்.

 

அதன்படி சுமார் 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்போருக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. வரும் ஜனவரி மாதம் மூன்றாம் தேதி முதல் ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி கொரொனா பரவலை கருத்தில் கொண்டு சுழற்சி முறையில் நாள் ஒன்றுக்கு 150 முதல் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்பு விநியோகம் செய்ய தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

 

மேலும் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பினை அனைத்து குடும்பங்களுக்கும் விநியோகம் செய்ய வேண்டி முழு பொறுப்பும் அவரையே சாரும் என்று அரசு குறிப்பிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளை வரிசையில் நிற்க வைக்காமல் அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon