ஆன்லைன் விளையாட்டு மற்றும் மனைவி பிரிந்து சென்றதால் இளைஞர் தற்கொலை..!
புதுச்சேரியில் ஆன்லைன் விளையாட்டில் 30 லட்சம் ரூபாய்க்கு மேல் இழந்ததாகவும், அதனால் மனைவி பிரிந்து சென்றதால் இளைஞர் கூறியுள்ளார். தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
திருக்கானூரை சேர்ந்த ஐயனார் – சந்திரகலா தம்பதிக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் நடைபெற்றது. பொறியாளராக பணியாற்றி வருவதாகவும் அதன் பிறகு சரியாக வேலை கிடைக்காமல் கூறப்படும் நிலையில் மனைவியின் நகைகளை அடகு வைத்து செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட மனக்கசப்பில் சந்திரகலா தாய் வீட்டிற்கு சென்ற நிலையில் அய்யனார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது ஒருபுறமிருக்க அவர் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி 30 லட்சம் ரூபாய் வரை இழந்ததாகவும் அதனால் ஏற்பட்ட பிரச்சனையால் மனைவி பிரிந்து சென்றதாகவும் கூறுகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





