பிரசவத்திற்கு பிறகு ரத்தப்போக்கால் பாதிக்கப்பட்ட பெண்..! மலையில் ஏறி காப்பாற்றிய மருத்துவ குழு..!
மலை கிராமத்தில் குழந்தை பெற்றபின் ரத்தப்போக்கால் பாதிக்கப்பட்ட பழங்குடியின பெண்ணிற்கு நள்ளிரவில் மலையேறி சென்ற மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஓசூர் அடுத்த கடமகுட்டை கிராமம் மலையின் உச்சியில் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த பெண்ணிற்கு நேற்று மாலை பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்திற்கு பிறகு ரத்த போக்கினாலும் கடும் வலியாலும் அவதிப்பட்ட பெண்ணை காப்பாற்றுமாறு உறவினர்கள் வட்டார அளவிலான மருத்துவர் ராஜேஷ்குமாருக்கு தகவல் அளித்தனர்.
அவர் தலைமையில் மருத்துவ குழுவினர் நள்ளிரவில் மலையின் மீது ஏறி சென்றனர். அதற்கு முன் அந்த பெண்ணை துணி கட்டி உறவினர்கள் கீழே கொண்டு வந்தனர். வழியில் அவர்களை சந்தித்த மருத்துவ குழுவினர் அங்கேயே வைத்து சிகிச்சை அளித்தனர்.
பின்னர் கீழே கொண்டு வரப்பட்ட பெண்ணும் குழந்தையும் சிகிச்சைக்காக தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





