--- --:--:-- --

ஆசிரியரின் பணிமாறுதலை ஏற்கமுடியாமல் கதறி அழுத அரசுப்பள்ளி மாணவர்கள்..!

13

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் பணி மாறுதலாகி செல்வதை அறிந்த மாணவர்கள் கதறி அழுதனர். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உதவி ஆசிரியராக பணியாற்றி வரும் ரவிச்சந்திரனுக்கும் பள்ளி தலைமை ஆசிரியருக்கும் இடையே முரண்பாடு இருந்து வந்த நிலையில் பிரச்சினை சுமூகமாக தீர்ப்பதற்காக இருவரும் மாறிக்கொள்ள முடிவெடுத்து உள்ளனர்.

 

ரவிச்சந்திரன் தனது பணி மாறுதலை மாணவர்களிடம் தெரிவித்தபோது பிரிய மனமில்லாமல் அவரை ஆரத்தழுவி கொண்ட மாணவர்கள் கதறி அழுதுள்ளனர்.

 

இதையடுத்து ஆசிரியர் சேதுராமன் பள்ளியை விட்டு மாறுவதை அறிந்து பள்ளிக்கு வந்த பெற்றோர் அவர் பள்ளியில் பணியாற்றுவதால் தான் பள்ளிகளில் பிள்ளைகளை படிக்க வைப்பதாக தற்போதைய தலைமை ஆசிரியரிடம் தெரிவித்த நிலையில், ஆசிரியர் வேறு பள்ளிக்கு செல்வதால் தங்களுடைய பள்ளிகளை வேறு பள்ளிக்கு மாற்ற போவதாக கூறி மாணவர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon