காருக்குள் மூச்சு விட முடியாமல் தவித்த குழந்தை..!
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பெற்றோர் காரின் கதவை மூடி விட்டு சென்றதால் காருக்குள் இருந்து மூச்சு விட முடியாமல் தவித்த குழந்தையை பொதுமக்கள் மீட்டு இருக்கின்றனர்.
கூடலூர் பஜார் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவுகள் மூடிய நிலையில் உள்ளே மூச்சுவிட முடியாமல் குழந்தை தவித்துள்ளது. அதனை பார்த்த அந்த பகுதியினர் லாவகமாக காரின் கதவை திறந்து குழந்தையை மீட்டு இருக்கிறார்கள். உடனடியாக வந்த பெற்றோர் கார் கதவை திறந்து அவர்களை கடிந்து கொண்டனர்.






