ஓடும் பேருந்தில் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சி..!
சேலம் அருகே ஓடும் பேருந்தில் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி நேற்று இரவு வந்த பேருந்து ஒன்றில் இளம் ஜோடி மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.
சேலம் கருப்பூர் சுங்கச்சாவடி அருகே வந்தபோது அவர்களை பார்த்து சக பயணிகள் அதிர்ச்சி அடைந்து இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். காதலித்து வந்த நிலையில் உறவினர்களின் எதிர்ப்பு காரணமாக வீட்டை விட்டு வெளியேறியதும் இந்த முடிவு எடுத்ததும் தெரியவந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





