--- --:--:-- --

ஓமிக்ரான் பாதிப்பால் முதலிடம் பிடித்த மாநிலம்..!

4

இந்தியா முழுவதும் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஓமிக்ரான் பாதிப்பு 153ஐ தாண்டி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் அதிவேகமாக உலகம் முழுவதும் பரவி வருகிறது.

 

கடந்த 2ஆம் தேதி கர்நாடகத்தில் இரண்டு பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு என நாடு முழுவதும் பரவ தொடங்கியது.

 

இந்த நிலையில் மகாராஷ்டிராவில் 54 பேருக்கும், டெல்லியில் 22 பேருக்கும், தெலுங்கானாவில் 20 பேருக்கும், ராஜஸ்தானில் 17 பேருக்கும், கர்நாடகாவில் 14 பேருக்கும் மற்றும் கேரளாவில் 11 பேருக்கும், ஆந்திரா, சண்டிகர், தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் தலா ஒன்று என மொத்தம் 153 பேர் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon