ஜனவரி 12-ம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி..!
தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைக்க மோடி சென்னை வர உள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவாரூர், நாகை மற்றும் அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டிமுடிக்கப்பட்டு மாணவர் சேர்க்கைக்கு தயாராக உள்ளது.
இந்த நிலையில் புதிய மருத்துவக் கல்லூரியை திறந்து வைப்பதற்காக வரும் ஜனவரி 12ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வர உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.






