--- --:--:-- --

திருப்பூரில் எல்.கே.ஜி படிக்கும் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர்..!

6

திருப்பூர் அருகே தனியார் பள்ளியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவத்தை கண்டித்து 500-க்கும் மேற்பட்டோர் 6 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர் பூலுவபட்டி அருகே தனியார் பள்ளியில் எல்கேஜி படிக்கும் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

குளிக்க வைத்த தாயிடம் உடல் வலிப்பதாக கூறிய நிலையில் பாலியல் வன்கொடுமை அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து புகார் அளித்த நிலையில் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வழக்கை மாற்றினார்.

 

குழந்தையை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் 4 வயது சிறுமியிடம் விசாரித்தனர். பள்ளியில் இருந்த 110 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் வழக்கு விசாரணையை போலீஸார் தாமதப்படுத்துவதால் குழந்தையின்உறவினர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் திருப்பூர் பெருமாநல்லூர் சாலையில் பூலுவபட்டி பிரிவில் மறியலில் ஈடுபட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon