பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்த ஒப்புதல்..!
பெண்களுக்கான திருமண வயதை 21 ஆக அதிகரிக்க பரிந்துரைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு சுதந்திர தின உரையின்போது பேசிய பிரதமர் மோடி பெண்களின் திருமண வயதை அதிகரிப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்படும் என்றார்.
இந்த நிலையில் பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. சிறப்பு திருமணச் சட்டம் மற்றும் இந்து சட்டங்களுக்கு தேவையான மாற்றங்களைக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





