--- --:--:-- --

குரங்குக்கு தனது மூச்சைக் கொடுத்து காப்பாற்றிய நபர்..!

12

பெரம்பலூர் மாவட்டத்தில் நாய்கள் கடித்ததில் உயிருக்கு போராடிய குரங்கு தன் மூச்சை கொடுத்து காப்பாற்றிய சமூக ஆர்வலர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமத்துவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

 

இந்த நிலையில் இவரது குடியிருப்பு பகுதிக்கு வந்த குரங்கு ஒன்றை அந்த பகுதியில் உள்ள நாய்கள் கடித்தது. இதில் பலத்த காயமடைந்த குரங்கு உயிருக்கு போராடி வந்தது. பிரபு குரங்கை பத்திரமாக மீட்டு மூச்சின்றி ஆபத்தான நிலையில் இருந்த குரங்கிற்கு தனது மூச்சை கொடுத்து காப்பாற்றினார்.

 

இதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு குரங்கை தூக்கி சென்ற அவர் அங்கு மருத்துவர்களின் உதவியுடன் முறையான சிகிச்சை அளித்து பின்னர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon