சாய் தேஜாவின் உடலைக் காண குன்னூர் சென்ற குடும்பத்தினர்..!
குன்னூரில் நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ வீரர் ஜடேஜா உயிரிழந்தது ஆந்திர மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் mi-17 v5 ரக ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த முதல் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் ரங்கா கிராமத்தை சேர்ந்தவர் தேஜாவும், இறந்தவர்களில் ஒருவர். இவரின் மரணச் செய்தியை அறிந்த குடும்பத்தினரும் சொந்த கிராமத்தில் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். மனைவியும், 2 குழந்தைகளுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரின் குடும்பத்தினர் சென்றுள்ளனர்.






